இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவே தொடரவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டிற்கான கட்சித் தலைவர்களுக்கான முதல் ஒன்றுகூடலானது இன்று நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெற்றுள்ளது.இந்த ஒன்றுகூடலின் போதே குறித்த அறிவிப்பை சபாநாயகர் விடுத்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் குழப்பத்தினால் பிரதமர் பதவியில் தொடர்ச்சியாக குழப்ப நிலை நீடித்து வந்திருந்தது.குறித்த குழப்பம் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்ற இழுப்பறி நிலை நீடித்தது.
இவ்வாறான நிலையிலேயே, சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த அறிவிப்பினை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.