சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கும் பிரபல தமிழ் சீரியல் நடிகை!

தமிழ் சினிமாவில் சின்ன திரையிலிருந்து ஏராளமானோர் வெள்ளித்திரைக்கு வந்து பிரபலமடைந்துள்ளனர். சந்தானம், சிவகார்த்திகேயன், பவானி ஷங்கர் என பலரும் சின்னதிரையிலிருந்து சினிமாக்களில் நடிக்க சென்று தற்போது பெரும் பிரபலமாக உள்ளனர்.

அவர்களை தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுமங்கலி சீரியலின் நாயகி தற்போது சினிமாவில் நடிக்கவுள்ளார்.

தமிழ் பெண்ணான இவர் தற்போது மலையாள படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அதில், மோகன்லாலின் அண்ணன் மகன் கதாநாயகனாக நடிக்கிறார்.அப்படத்தை மதுசூதனன் இயக்குகிறார்.இதேபோல் திவ்யா தமிழ் படத்திலும் மேலும் ஒரு தெலுங்கு படத்திலும் கதாநாயகியாக நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.