பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சி ஒன்றில் கனடாவில் வாழும் ஈழ சிறுமி பங்கு பற்றி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்க வைத்துள்ளார்.
திறமை என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வித்தில் இருக்கும். அதனை வெளிப்படுத்துவதற்கான களமாக குறித்த பாடல் நிகழ்ச்சி காணப்படுகின்றது.
அண்மையில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் இது குறித்து ஈழ சிறுமியான சின்மயி கருத்து வெளியிட்டுள்ளார். குறித்த காட்சி தற்போது சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இதேவேளை, இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு சென்று வாழும் திறமையானவர்கள் பலர் இருக்கின்றனர். எனினும் அவர்களின் திறமையை வெளிக்காட்ட பலருக்கு வாய்ப்புகள் அமைய வில்லை.
இருப்பினும் சின்மயிக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ளுவார் என்று பலர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.