அமெரிக்காவின் தென்மேற்கு மாகாணமான அரிசோனாவில் 14 ஆண்டுகளாக கோமாவில் படுத்திருந்த பெண் ஒருவர் பிள்ளை பெற்றெடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண்மணி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு அவர் பிள்ளை பெறும் வரை இந்த விவகாரம் தொடர்பில் எந்த தகவலும் தெரியவில்லை என கூறப்படுகிறது.
அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் பெயர் வெளியிடப்படாத குறித்த பெண்மணி கடந்த 14 ஆண்டுகளாக கோமா நிலையில் படுத்திருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி அவர் பிள்ளை பெற்றுள்ளார். இந்த விவகாரத்தில் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் பலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், குறித்த பெண்மணி பிள்ளை பெறும் வரை அந்த மருத்துவமனை ஊழியர்கள் எவருக்கும் இத்தகவல் தெரியவில்லை என தெரியவந்துள்ளது.
நீண்ட பல ஆண்டுகளாக கோமாவில் இருந்தவர் பிள்ளை பெற்றெடுத்த சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில்,
அப்பகுதி மக்கள் பலர் கூட்டமாக சென்று குறித்த பெண்மணியை பார்வையிட்டு வருகின்றனர்.
மேலும் குறித்த மருத்துவமனையில் பெண் நோயாளிகளின் அறைக்கு ஆண் ஊழியர்கள் கண்டிப்பாக ஒரு பெண் ஊழியருடன் மட்டுமே செல்ல வேண்டும் என்ற விதிமுறையும் வகுக்கப்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளாக மருத்துவ சேவையில் ஈடுபட்டுவரும் குறித்த மருத்துவமனையில் இதுபோன்ற ஒரு செயல் அரங்கேறுவது இதுவே முதன்முறை என தெரிவித்துள்ள நிர்வாகம்,
பொலிஸ் விசாரணை நடைபெற்றுவருவதால் குறித்த விவகராம் தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.