தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
விஜயகாந்திற்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில், விஜயகாந்திற்கு, பாஜக தலைவர் தமிழிசையின் கணவர் சிறுநீரக் சிகிச்சை நிபுணர் சவுந்தரராஜன், சிகிச்சை அளித்து வந்தார்.
ஆனால் அவர் உடனடியாக விஜயகாந்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என்று கூறிவிட்டார். இதன் காரணமாக, விஜயகாந்த் சிகிச்சைக்காக குடும்பத்தோடு அமெரிக்கா சென்றுள்ளார்.
ஆனால் அங்கு அவருக்கு ஏற்ற கிட்னி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், விஜயகாந்தும், அவரது குடும்பத்தினரும் தனது நண்பர் ஒருவரது வீட்டில் தங்கியுள்ளனர்.
அதனை தொடர்ந்து தற்போது அவருக்கு கிட்னி கிடைத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில், இந்த மாதம் இறுதியில் ஆபரேஷன் நடைபெறவுள்ளது. பின்னர் அவர் ஒரு மாதம் ஓய்வு எடுத்துவிட்டு, மார்ச் மாதத்தில் சென்னை திரும்பி விடுவார் என செய்திகள் வெளிவந்துள்ளது.