ஏன் குறட்டை வருகிறது? தடுக்கும் வழிகள்!

குறட்டை என்பது நோய் அல்ல, ஒரு குறையே. இது வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் வரும்.நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது.

மூக்கு அடைப்பு உள்ளவர்கள் ஆவி பிடிப்பதன் மூலம் நாசி துவாரங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு நீங்கி இரவில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதை தடுக்கலாம். மன அழுத்தத்தில் இருந்தால், குறட்டை விட நேரிடும்.

தூங்கும்போது தலைப் பகுதியை ஓரளவு உயர்த்திக்கொள்ள வேண்டும். இரவில் உறங்கும் போது உயரமான தலையணையை உபயோகிக்க வேண்டும். ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்துப் படுக்க வேண்டும்.

தூங்கும்போது குறட்டை ஏற்படுபவர்கள் மது பழக்கம், புகைப்பழக்கத்தை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். இரவில் படுக்க செல்லும் முன், வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, வாயில் ஊற்றி சிறிது நேரம் கொப்பளித்தால், குறட்டை விடுவதைத் தவிர்க்கலாம்.

சூடான நீரில் எலுமிச்சை சாற்றினை சிறிது ஊற்றி, அத்துடன் தேன் கலந்து குடித்து வருவதன் மூலமும், குறட்டை பிரச்சனையைத் தடுக்கலாம். மேலும் யோகா செய்வதன் மூலமும் குறட்டை பழக்கத்தை தவிர்க்கமுடியும்.

இரவில் உறங்கும் போது பிட்சா, பர்கர் போன்ற அதிக கொழுப்புள்ள துரித உணவுகளை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் தினமும் இஞ்சி, மிளகு, துளசி மற்றும் ஏலக்காயை நீரில் சேர்த்து கொதிக்க விட்டு, அந்நீரை வடிகட்டி குடித்து வருவதன் மூலமும் குறட்டை பிரச்சனையை தவிர்க்கலாம்.