பிளாஸ்டிக் ஒழிப்பு தடையை தவிடு பொடியாக்கிய மாணவர்கள்!

ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடைவிதித்த நிலையில், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பே அறந்தாங்கி ஒன்றியம் ஆவணத்தாங்கோட்டை மேற்கு அரசு நடுநிலைப்பள்ளியில் அனைத்து வகை பிளாஸ்டிக் பொருட்களையும் ஒழித்து நூறு சதவீதம் பிளாஸ்டிக் இல்லா பள்ளியாக திகழ்கிறது.

2018 ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் பிளாஸ்டிக் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு பிளாஸ்டிக் இல்லா மெட்டல் பேனா, காகித பேனா, மெட்டல் மற்றும் மரத்தாலான ஸ்கேல் என அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள்அனைத்தும் நன்கொடையாளர்களால் வழங்கப்பட்டது.

மேலும் மாணவர்களும் ஆசிரியர்களும் உணவு கொண்டுவர மஞ்சள் பை, தண்ணீர் கொண்டு வர சில்வர் வாட்டர்பாட்டில் பயன்படுத்துகின்றனர்.

ஆசிரியர் இருக்கை, குப்பைத்தொட்டி, குடிநீர் கேன்அனைத்து பொருட்களும் பிளாஸ்டிக் இல்லா பொருட் களாக மாற்றப்பட்டுள்ளன.

இதன் மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்மாதிரியாகவும், அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளங்கும் இப்பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும்மாணவ, மாணவிகளை மக்கள் அனைவரும் பாராட்டினர்.