6 மாதமாக அரசு கல்லூரி விடுதியில் நடக்கும் அவலம்.!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்படியில் இருக்கும் அரசு கல்லூரி மாணவிகள் தாங்கும் விடுதியில் 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த விடுதியில் தருமபுரி., கிருஷ்ணகிரி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து பயிலும் மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த விடுதியில் இருக்கும் மாணவிகள் கடந்த 6 மாதங்களாகவே குடிநீர் வசதி சரிவர கிடைக்காமல் தவித்து வந்துள்ளனர். இதன் காரணமாக விடுதிக்கு அருகில் உள்ள ஔவையார் பகுதிக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்து குடிக்கவும்., குளிக்கவும் உபயோகம் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில்., குடிநீர் வசதி சரிவர செய்து தரக்கூறி பல முறை நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுத்தகாததால்., ஆத்திரமடைந்த மாணவிகள் இன்று காலை சேலம் – தருமபுரி பிரதான சாலையியல் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சமப்வம் குறித்து தகவலறிந்த அதியமான் கோட்டை காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

மேலும்., அங்கு வந்திருந்த திட்ட உதவி இயக்குனர் திரு.ரவிசங்கரநாத், வட்டார வளர்ச்சி அலுவலகர் திரு.விமலன், கல்லூரி வணிகத் துறை பேராசிரியர் திரு.பிரபாகரன் ஆகியோர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் குடிநீர் விநியோகம் சரிவர செய்யப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பும்., சிறிது நேரம் பரபரப்பும் ஏற்பட்டது.