பப்புவா நியூ கினியா நாட்டின் மலைப்பகுதியில் சூனியக்காரிகள் என குற்றஞ்சாட்டி பெண்கள் மீது கும்பல் ஒன்று கொடூர தாக்குதலுக்கு ஈடுபட்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பப்புவா நியூ கினியா நாட்டின் மலைப்பகுதியில் குடியிருக்கும் பழங்குடி மக்கள் மீதே இந்த கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த மலைவாழ் மக்களின் குடியிருப்புக்குள் புகுந்த சுமார் ஆயிரம் வரையான கிராம மக்கள் கொட்டுர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
பெண்களை சூனியக்காரிகள் என கூறி கூட்டு பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளனர். பெண் ஒருவரை குடிசைக்கு உள்ளே வைத்து நிர்வாணப்படுத்தி சித்திரவதைக்கு உட்படுத்தி, பின்னர் வெளியே இழுத்து வந்து சாகும் மட்டும் உயிருடன் கொளுத்தியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக மலைவாழ் மக்களை தொடர்ந்து தாக்கிவரும் சம்பவங்களால் இப்பகுதியில் மட்டும் சுமார் 20 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி இப்பகுதியில் டசின் கணக்கில் கொடூர தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 55 வயதான ரேச்சல் என்ற 2 பிள்ளைகளின் தாயாரை திடீரென்று சூழ்ந்த கும்பல் ஒன்று அவரை தாக்கி நிர்வாணப்படுத்தியுள்ளது.
பின்னர் ஒரு குடிசைக்குள் இழுத்துச் சென்று ஒரு நாள் முழுவதும் கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள சிலர் ரேச்சலை அங்கிருந்து தப்பிக்க வழி செய்துள்ளனர். மலைப்பகுதிக்கு சுற்றுமுள்ள கிராமங்களில் மாரடைப்பு அல்லது நீரிழிவு நோய்களால் மரணமடையும் நபர்களை சூனியம் செய்து கொன்றுள்ளதாக அப்பகுதி மக்கள் நம்புவதே ரேச்சல் போன்ற பெண்கள் தாக்கப்படுவதற்கு காரணம் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் மதுபோதையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சூனியாக்காரிகளே காரணம் என கூறி, மலைவாழ் மக்கள் கொடூரமாக தாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.