இந்த பழம் மட்டும் போதுமே தங்கம் போல மின்னிட!

பெண்கள் அனைவருமே தங்களது அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. இதற்கு பலவழிகளில் முயற்சி செய்திருப்போம். இதற்கு சப்போட்டா பழம் சிறந்த ஒரு இயற்கை தீர்வாக அமைகின்றது.

சப்போட்டா பழத்தில் பலதரப்பட்ட சத்துக்கள் நிறைந்துக் காணப்படுவதற்கு , இந்த பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் டானின் நிறைந்துக் காணப்படுகிறது.

இது பழம் நோயை குணப்படுத்துவதற்கு மட்டுமின்றி இது முகத்தில் உள்ள கருமைகள் நீங்கி தங்கம் போல பளபளவென மின்னச் செய்கின்றது. தற்போது கீழ் காணும் குறிப்பை பயன்படுத்தி முகத்தை எவ்வாறு அழகுப்படுத்துவது என்று பார்ப்போம்.

தேவையானவை
  • சப்போட்டா பழம் 1
  • தேன் 1 ஸ்பூன்
  • சர்க்கரை 1 ஸ்பூன்
செய்முறை

சப்போட்டாவை தோல் மற்றும் விதைகளை நீக்கி அரைத்து கொள்ளவும்.

பிறகு இந்த சாற்றுடன் தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.

இதனை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.

இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி பொலிவாக இருக்க உதவி புரிகின்றது.