சேலம் மாவட்டம் செந்தாள்பட்டியைச் சேர்ந்தவர் செண்பகம் (வயது 26). திருச்சியைச் சேர்ந்த போலீஸ்காரர் ஜெயதேவ் (வயது 28).
இவர்கள் இருவரும் கோயில் பாதுகாப்பு பணிக்காக, ராமேஸ்வரம் கோயிலில் தொடர்ந்து பணியாற்றி வந்தனர். அப்போது, இருவருக்கும் காதல் மலர்ந்தது.
பின்னர் ஆறு மாதங்களுக்கு முன்பாக, பணி மாறுதலால், அவரவர் சொந்த ஊரில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களின் காதலைத் தெரிந்த பெற்றோர்கள், இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். அடுத்த மாதம் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், ஜெயதேவ் கிட்னி பாதிப்பு காரணமாக, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைக் காண வந்த செண்பகம், தன் காதலன் நோயினால் அவதிப்படுவதைக் கண்டு, மனம் கலங்கினார்.
தன் காதலன் நோயினால் அவதிப்படுவதைக் காணச் சகிக்க இயலாத, செண்பகம், தங்கள் காதல் மலர்ந்த ராமேஸ்வரம் கோயில் முன்பாக, எலி பேஸ்ட்டைத் தின்று தற்கொலைக்கு முயன்றார்.
அவரை அங்கிருந்தவர்கள், மீட்டு, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். செய்தி அறிந்த, செண்பத்தின் பெற்றோர், உடனடியாக, ராமேஸ்வரம் வந்து, மேல் சிகிச்சைக்காக, அவரை, சேலத்திற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தன் காதலனுக்காக, உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற பெண் போலீசின் செயல், ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.