கண் பார்வை நோய் உள்ளவர்கள் நாளை செய்ய வேண்டிய காரியம்….!

ஞாயிற்றுக் கிழமை என்றாலே, உலகிற்கே விடுமுறை தினம்…!

ஆனால், இந்த ஞாயிற்றுக் கிழமையின் மகத்துவம், மிக மேன்மையானது. ஞாயிறு என்பது சூரியனைக் குறிக்கும். இந்த ஞாயிற்றுக் கிழமையின் சூரிய வெளிச்சம், மற்ற நாட்களை விடச் சற்று பிரகாசமாக இருக்கும்.

இந்த நாளில், சூரியனை சிவப்பு பூக்களாலும், ரத்த சந்தனத்தாலும், அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த ஞாயிற்றுக் கிழமையில், சூரிய பகவானை வணங்கி விட்டு, விரதம் இருக்க வேண்டும்.

இதற்கு இரவி வார விரதம் என்று பெயர்.

இந்த விரதம் இருக்கும் போது, எண்ணெய், உப்பு போன்றவற்றை உணவில் சேர்க்க கூடாது. மாலை சூரியன் மறைந்த பிறகு, உணவு அருந்துவதை நிறுத்தி விட்டு, மறு நாள் திங்கட்கிழமை சூரிய உதயம் வரும் வரை, உபவாசம் இருக்க வேண்டும்.

இப்படி விரதம் இருந்தால், கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும், என்று நம் முன்னோர்கள், குறிப்பெழுதி வைத்துள்ளனர்.

கண் நோய் மட்டுமல்லாமல், சரும நோயையும், இந்த விரதம் மருத்துவ ரீதியாகக் குணப்படுத்தும், என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

அதனால் “ஞாயிறு போற்றி” என்று சூரியனை நமஸ்கரித்து விட்டு, இந்த விரதத்தை தொடர வேண்டும்.