சுமார் 3 மணி நேரத்துக்கு முன்பாக யுவதி ஒருவர் கல்லடி பாலத்தில் இருந்து குதித்துள்ளதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கல்லடி பாலத்திற்குள் யுவதி குதித்து 3 மணி நேரமாகியும் அவரை தேடுவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அங்கு வருபவர்கள் செல்பி எடுப்பதிலும் புதினம் பார்ப்பதிலும் ஆர்வம் காட்டுவதே தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குதித்த பெண்ணும் (இவர் ஆரையம்பதியை சேர்ந்தவர்) நாவற்குடாவை சேர்ந்த ஆணும் பாலத்தில் நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்ததாகவும், வாக்குவாதம் முற்றியதாலேயே பாலத்தில் குதித்ததாகவும் தெரிகிறது.