முதல் முறையாக ஒரு இஸ்லாமிய பெண்ணுக்காக நீக்கப்பட்ட நடைமுறை….!!

ஒரு அகதியாக அமெரிக்காவில் நுழைந்து, இன்று தலையில் ஹிஜாப் அணிந்து கொண்டு நாடாளுமன்றத்தில் பிரவேசித்துள்ள இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்காக வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்காவே சில மாற்றங்களை ஏற்றுக் கொண்டுள்ளது.அந்தப் பெண், Ilhan Omar, அமெரிக்காவின் முதல் இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர்.சோமாலியிருந்து அமெரிக்காவுக்கு ஒரு அகதியாக வந்த இந்த 37 வயதுப் பெண், இன்று மின்னசோட்டா சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகியிருக்கிறார்.அமெரிக்காவில் சுமார் 181 ஆண்டுகளாக தலையை மறைத்து ஆடை அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், முதல் முறையாக Ilhan Omarக்காக அந்த தடைநீக்கப்பட்டுள்ளது.இதனால், இனி Ilhan Omar ஹிஜாப் அணிந்துகொண்டே நாடாளுமன்றத்தில் உரையாற்றலாம், வாக்கெடுப்புகளில் பங்கு கொள்ளலாம்.அது மட்டுமின்றி இன்னொரு பெரிய மாற்றத்திற்கும் அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.அதாவது அமெரிக்க அரசியல் வரலாற்றில் முதன்முறையாக Ilhan Omar, கையில் ஜெப மாலையுடன், குரான் மீது சத்தியம் செய்து பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டுள்ளார்.

யாரும் வற்புறுத்தி என்னுடைய தலையில் இந்த ஸ்கார்பை அணிவிக்கவில்லை, அது எனது விருப்பத்தேர்வு, அது முதல் சட்டத்திருத்தத்தால் பாதுகாக்கப்படுகிறது என்கிறார் Ilhan Omar.