சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செல்வோருக்கு..

சிவனொளிபாத மலை யாத்திரைக் காலத்தில் நல்ல தண்ணியில் இருந்து சிவனொளிபாத மலைக்கு வரும் அடியார்களுக்காக நல்லதண்ணி நகரில் மருத்துவ மத்திய நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் செயற்படும் வகையில் இது இயங்குமென நுவரெலிய மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர் டொக்டர் சேனக தலஹல தெரிவித்தார்.

வார இறுதியில் அதிகளவான அடிகளாரின் வருகையை கருத்தில் கொண்டு சுகாதார பணிக்குழுவின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.