திருவாரூர் தொகுதிக்கு வரும் 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதையடுத்து, ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கான வேட்பாளரை தேர்வு செய்து அறிவித்து வருகிறது. ஏற்கனவே திமுக, அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தங்களுக்கான வேட்பாளரை அறிவித்த நிலையில், அதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இன்னும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. இக்கூட்டத்தின் முடிவில், திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி கமல்ஹாசன் முடிவெடுப்பார் என தெரிவிக்கப்பட்டது.
இன்று 05/01/2019 (சனிக்கிழமை) மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின் விவரங்கள்.#MakkalNeedhiMaiam pic.twitter.com/WKGGwNrYYi— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) January 5, 2019