பட்டப்பகலில் பயங்கரம்.! வரதட்சணை கொடுமையில் மாமியாருக்கு விழுந்த கத்திக்குத்து.!!

மதுரை மாவட்டத்தில் உள்ள கரிமேடு மேலபென்னகரத்தை சார்ந்தவர் சுந்தர். இவரது மகனின் பெயர் அஜித் (22). இவருக்கும் அதே பகுதியை சார்ந்த தமிழ்செல்வி (வயது 38)., என்பவரின் மகளான சந்தியாவிற்கு இடையே காதல் இருந்து வந்துள்ளது.

இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில்., இருவரின் இல்லத்திலும் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு வந்ததால் சென்ற 30 ம் தேதியன்று வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில்., திருமணம் முடிந்து சில நாட்கள் ஆனதும் சந்தியாவின் மாமியார் கேட்டுள்ளார். இதனை அறிந்த தமிழ் செல்வி சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

மேலும்., அந்த புகாரில் தனது வீட்டில் உள்ள பொருளை திருடி சென்றதாகவும் அதனை கண்டறிந்த தரக்கூறியும் புகாரில் கூறியுள்ளார். இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் அஜித்தின் இல்லத்திற்கு சென்று அந்த பொருளை மீட்டுள்ளனர்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த அஜித்., தமிழ் செல்வியை கொலை செய்ய திட்டமிட்டு., ஆட்டோவில் காளவாசல் பகுதியில் சென்று கொண்டு இருந்த தமிழ்செல்வியை கத்தியால் குத்தியுள்ளார்.

இதனால் நிலைதடுமாறிய நிலையில் சாலையில் விழுந்த அவரை கண்ட பொதுமக்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும்., இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர்., இந்த பிரச்சனையில் தொடர்புடைய அஜித், அவரது தந்தை சுந்தர், உறவினர் மாணிக்கம் ஆகியோரை கைது செய்தனர்.