இந்து சமுத்திரப் பிராந்தியத்தை மீண்டும் மிரட்ட வரும் பபுக் புயல்…!!

அந்தமான் கடலில் மையம் கொண்டுள்ள ‘பபுக்’ புயல் நாளை மாலை கரையை கடக்கவுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து வளைகுடாவில் உருவாகி உள்ள புயலுக்கு ‘பபுக்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.இந்த புயலானது அந்தமான் கடல் நோக்கி 10 கிலோ மீற்றர் வேகத்தில் நகர்ந்து வருவதுடன், இன்று காலை அந்தமானுக்கு கிழக்கு  மற்றும் தென்கிழக்கே 720 கிலோ மீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இந்த புயலானது மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை மாலை அந்தமான் கடலை அடைந்து கரையை கடக்கிறது. அப்போது மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்திலும் அதிகபட்சமாக 90 கிலோ மீற்றர் வேகத்திலும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த புயல் அந்தமானில் கரையைக் கடந்த பின்பு வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மர் கடற்கரை நோக்கி சென்று 7 அல்லது 8ஆம் திகதியளவில் வலுவிழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.