!ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தின் கொய்ரா மாதா எனும் கிராமத்தில் மகாநதிக்கரையில் நடிகை சிம்ரன் சிங்கின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இந்த கொலை தொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பல்பூர் எனும் ஒரே ஒரு பாடல் மூலம் ஒடிசா முழுவதும் பிரபலம் ஆனவர் நடிகை சிம்ரன். இவரது முழுப் பெயர் சிம்ரன் சிங்.
நண்பர்களை சந்தித்துவிட்டு வருவதாக சென்ற மகள் வீடு திரும்பவில்லை என்று தாயார் புகார் அளித்திருந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து சிம்ரனின் உடலில் கண்டெடுக்கப்பட்டது.
சிம்ரனின் கணவர் Dhrubraj Suna இந்த கொலைக்கு காரணம், அவர்தான் இந்த கொலையை செய்தது என தாயார் புகார் அளித்ததையடுத்து இன்று போஸ்கோ சட்டத்தின் கீழ் கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இறந்துபோவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர், தனது தோழிக்கு மெசேஜ் ஒன்றை சிம்ரன் அனுப்பியுள்ளார். மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன், எல்லோரையும் விட்டு செல்லப்போகிறேன் என அனுப்பியுள்ளார்.
சிம்ரனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் அவர் உயிரிழந்திருப்பது தெரியந்துள்ளது.