ஒரே நபரை காதலிக்கும் இரட்டை சகோதரிகள்!

அவுஸ்திரேலியாவில் ஒரே நபரை காதலிக்கும் இரட்டை சகோதரிகள், தங்கள் காதலரால் ஒரே நேரத்தில் கர்ப்பமாக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பெர்த்தை சேர்ந்த இரட்டையர்கள் அன்னா மற்றும் லூசி டீ. இவர்கள் இருவரும் பென் பைரீன் (35) என்ற நபரை கடந்த 2012-ல் இருந்து டேட்டிங் செய்து வருகிறார்கள்.

ஒரே நபரை இருவரும் சேர்ந்து காதலிப்பதை அன்னாவும், லூசியும் பெருமையாக நினைக்கிறார்கள்.

இதனிடையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு அன்னாவும், லூசியும் அளித்துள்ள பேட்டி வைரலாகியுள்ளது.

அவர்கள் கூறுகையில், வருங்காலத்தில் பைரீனை திருமணம் செய்யவுள்ளோம், பின்னர் நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பமாகி குழந்தைகள் பெற்று கொள்ள விரும்புகிறோம்.

இந்த ஐடியாவை எங்கள் தாய் தான் கொடுத்தார். இது பைரீனுக்கு மிக பெரிய சவால் என்பது எங்களுக்கு தெரியும் என கூறியுள்ளனர்.

அவுஸ்திரேலியா சட்டப்படி ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை மாற்றிமைக்க வேண்டும் என அன்னாவும், லூசியும் ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது.