பாடகியின் இசையில் மயங்கி கட்டுக்கட்டாக பணத்தினை அள்ளிவீசி பரவசப்படுத்திய ரசிகர்கள்

குஜராத்தில் பாடகி கீதா ரூப்ரியின் கச்சேரி நடக்கிறது என்றால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும்.

கடந்த சில ஆணடுகளாக நாட்டுப்புற பாடல்கள் மூலம் பல்வேறு சமுதாய விழிப்புணர்வு கருத்துகளை முன்வைத்து பாடி வருகிறார்.

இவரது கர்பா உள்ளிட்ட பக்தி பாடல்கள், அம்மாநிலத்தின் பட்டி தொட்டி முழுவதும் பிரபலம் பெற்றுள்ளது .

இந்நிலையில் நவாசிரி என்ற இடத்தில், கவுஸ்வா அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட பஜன் நிகழ்ச்சியில் அவரின் பக்தி பாடலை கேட்டு, ரசிகர்கள் பணமழை பொழிந்த காட்சி வியப்பில் ஆழ்த்தியது.

இந்திய ரூபாய் நோட்டுகள் மட்டுமின்றி, அமெரிக்க டொலர் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளும், கட்டுகட்டாக GEETHA RUBRI மீது வீசி இறைத்து, பாடகரை பரவசப்படுத்தினர்.