ஒன்பது பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒன்ராறியோவில் தற்கொலை!

ஒன்ராறியோவில், கடந்த ஆண்டு ஒன்பது பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஒன்ராறியோவின் தலைமை நிர்வாகி டிர்க் ஹூயர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த அதிகளவான எண்ணிக்கை கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்கொலை செய்துகொண்டமை குறித்து ஆய்வு ஒன்றைத் தொடங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தற்கொலைகள் குறித்து பெருமளவான ஆதாரங்கள் தற்போது சேர்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், மனநலம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்திருக்க கூடுமெனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.