ஜூஸ் குடிக்க சென்றவர்களுக்கு பறிபோன 10 லட்சம்! வெளிச்சத்திற்கு ஊழியர்களின் தில்லுமுல்லு வேலைகள் !

சென்னை பெருங்குடியில் செயல்பட்டு வரும் பிரபல ஐ.டி. நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள குளிர்பான கடையில், வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தும்போது, கடை ஊழியர்கள் ஹிம்மர் என்ற கருவி மூலமாக ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்களை பதிவு செய்துள்ளனர். பின்னர் லேப்-டாப் பயன்படுத்தி போலியான ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து பணமோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இது குறித்து ஐ.டிநிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு தெரியவந்த நிலையில் 15 ஊழியர்கள் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

அதில் நாங்கள் வேலைபார்க்கும் நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வரும் குளிர்பான கடையில் ஜூஸ் குடிப்பதற்காக பணம் வாங்கமாட்டார்கள். வங்கி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி மட்டுமே ஜூஸ் குடிக்க வேண்டும்.

அவ்வாறு நாங்கள் கார்டுகளை பயன்படுத்தும்போது, கடை ஊழியர்கள் ஹிம்மர் கருவி மூலமாக கார்டுகளின் ரகசிய எண்களை பதிவு செய்து, போலி ஏ.டி.எம் கார்டு மூலமாக எங்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் வரை பணத்தை மோசடி செய்துள்ளனர் என கூறப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து .
மோசடியில் ஈடுபட்ட ஜூஸ் கடை ஊழியர்களான பீகார் மாநிலத்தை சேர்ந்தராகுல் சிங், குந்தன்சிங், சுரேஷ்குமார், ராகுல் குமார், சுதிர், பிகாஸ் குமார், குந்தன்குமார், ராம்பீர் குமார், விபின் குமார் ஆகிய 9 பேர் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரிக்க பயன்படுத்திய ஹிம்மர் கருவி மற்றும் லேப்-டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.