அமெரிக்காவில் வசித்து வரும் 11 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் விழுந்த 34 வயது நபரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ரகு. இவர் மனைவி லலிதா. தம்பதிக்கு ஆத்வைக் நந்திகொட்குர் (11) என்ற மகன் உள்ளார்.
மூவரும் அமெரிக்காவின் Eagan நகரில் வசித்து வந்தனர். இந்நிலையில் அங்குள்ள ஒரு வணிக வளாகத்துக்கு மூவரும் சென்றனர்.
அங்கிருந்த நீச்சல் குளத்தில் ஸ்ரீனிவாசா (34) என்பவர் குளித்து கொண்டிருந்த நிலையில் திடீரென நீரில் மூழ்க தொடங்கினார்.
இதை பார்த்த லலிதா அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்த நிலையில் யாரும் உதவ முன்வரவில்லை.
இதையடுத்து ரகு தனது உடலில் பாதுகாப்பு கவசத்தை கட்டி கொண்டு குளத்தில் குதித்து ஸ்ரீனிவாசாவை காப்பாற்ற முயன்றார்.
ஆனால் நீச்சல் குளத்தின் மேல் பக்கத்தில் ரகுவை தண்ணீர் இழுந்ததால் அவரால் ஸ்ரீனிவாசாவை காப்பாற்ற முடியவில்லை.
இதன்பின்னர் ரகுவின் மகன் ஆத்வைக் தண்ணீரில் குதித்து ஸ்ரீனிவாசாவை காப்பாற்ற முயன்று கஷ்டப்பட்டு அவரை மேலே தூக்கினார்.
பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை தண்ணீரில் இருந்து வெளியில் தூக்கினர்.
வெறும் 30 கிலோ எடை கொண்ட சிறுவன் ஆத்வைக், 77 கிலோ எடை கொண்ட ஸ்ரீனிவாசனை காப்பாற்றியது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இதன்பின்னர் ஸ்ரீனிவாசாவுக்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்ட நிலையில் அவர் உயிர் பிழைத்தார்.
இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ள நிலையில் சிறுவன் ஆத்வைகுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.