பெற்ற தாயை உயிரோடு எரித்து கொன்ற மகன்!

இந்தியாவில் சொத்து தகராறில் பெற்ற தாயை உயிரோடு எரித்து கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தபஸ் மனடல் (30). இவர் தனது தாய் கீதா (55) உடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் தாய் கீதாவுடன் தபஸுக்கு சமீபகாலமாக சொத்து தகராறு இருந்து வந்தது.

நேற்று மீண்டும் இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் கீதாவை தபஸ் அடித்து உதைத்தார்.

பின்னர், பெற்ற தாய் என்றும் பாராமல் கீதாவை உயிரோடு எரித்து கொலை செய்தார் தபஸ். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் தபஸை கைது செய்துள்ளனர்.

பெற்ற தாயை மகன் எரித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.