அதிமுகவில் இணையும் பிரபல கட்சி!

அதிமுகவுடன் இணைந்து செயல்பட உள்ளதாக எம்ஜிஆர்- அம்மா – தீபா பேரவை நிறுவனர் ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர்- அம்மா – தீபா பேரவையின் பொது குழு கூட்டம் இன்று சேலத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா தலைமை தாங்கினார்.

பொது குழு முடிந்த பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன். இது தொடர்பாக தொண்டர்களிடம் கருத்து கேட்க உள்ளோம்; அனைவரின் கருத்தும் அதுவாகவே இருக்கும்.

வருகிற திருவாரூர் தேர்தலில், அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.