பல பெண்கள் பொதுவாகவே தனக்கு அழகான நகங்கள் இல்லை என வருத்த படுவது உண்டு. அவர்கள் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினாலே எளிதில் அழகான நகங்களை பெறலாம்.
- நகம் வெட்டவேண்டுமென்றால் தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினால் எளிதாக வெட்டலாம். ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள் உடைந்து விடும். எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.
- நகங்கள் கடினத்தன்மையோடு இருந்தாலும் எளிதில் உடைந்து போகக் கூடியவை. இரவில் விரல் மற்றும் நகத்தில் சிறிது வெண்ணெய் தடவவும் . விரல் நகங்கள் உறுதியாக இருப்பதற்கு வெந்நீரில் எலுமிச்சைச் சாற்றை விட்டு, கைகளை அதில் ஊறவையுங்கள். வாரம் 2 முறை இவ்வாறு செய்தால் நகங்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.
- தண்ணீரை சிறிது உப்புக் கலந்து சூடுபடுத்தி, அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால் விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும். நகங்கள் அடிக்கடி உடைந்து போகாமல், கோணலாக வளராமல் நேராக வளர கால்சியம் சத்துள்ள உணவு பொருட்களை உணவில் சேர்த்து கொள்ளவேண்டும்.
- பப்பாளிப்பழம் சிறிதளவை மசித்து கூழாக்கி அதனுடன் மஞ்சள் சிறிதளவு கலந்து பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவினால் நாளடைவில் தோல் நல்ல மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறி கை மென்மையாக இருக்கும்.
- நகத்தை பல்லால் கடிப்பது அறவே தவிர்க்க வேண்டும். இதனால், நகங்களின் இடுக்குகளில் தங்கும் கிருமிகளால் நோய்த்தொற்று ஏற்படக்கூடும்.
- வாரத்திற்கு ஓரிரு நாட்கள் நகச்சாயம், உபயோகிக்காமல் இருப்பது நல்லது. தினமும் நகச் சாயம் உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கி காணப்படும்.