சீனர்கள் கள்ளமாக இருந்தார்கள் என்ற தகவல் அம்பலம்- இந்தியா அமெரிக்கா பதற்றம்

சீன நாட்டின் மிக முக்கியமான முதலீட்டாளர்கள், மற்றும் அரசியல் பலம் கொண்ட மிக மிக முக்கியமான நபர்களை ஏற்றிக்கொண்டு இலங்கை வந்த விமானம் ஒன்று களவாக தரை இறங்கி. பின்னர் அனுமதி இன்றி இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது என்ற செய்திகள் கசிந்துள்ளது. இது தொடர்பாக புது டெல்லியில் உள்ள டெகல்கா இணையம் அவசர செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளதோடு. இந்திய மத்திய அரசு இச்சம்வத்தை உண்ணிப்பாக அவதானித்துள்ளதாகவும் அது கருத்து வெளியிட்டுள்ளது. சீனர்களை ஏற்றி வந்த குறித்த விமானம் மிகவும் பாதுகாப்பான ராணுவ தரம் மிக்க விமானம் என்றும்.

அது கடந்த 3ம் திகதி பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இருப்பினும் அதில் இருந்து எவரும் வெளியே வரவில்லை. எரி பொருளை மட்டும் நிரப்பிவிட்டு அது உடனடியாக புறப்பட்டுச் சென்று திருகோணமலை சீனக்குடா துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியுடனேயே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பின்னர் குறித்த விமானம் நாட்டின் அனுமதி பெறதா விமான நிலையம் ஒன்றிலிருந்து நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது என்று அறியப்படுகிறது. அது எந்த விமான நிலையம் என்பது எவருக்கும் தெரியாது.

நாட்டின் குடிவரவு, குடியகல்வு சட்டம் மற்றும் சிவில் விமான சேவைகள சட்டத்திற்கமை வெளிநாட்டு விமானம் ஒன்று அனுமதி பெறாமல் நாட்டை விட்டு செல்ல முடியாது. ஆனால் அது இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றபின்னரே விமான சேவை திணைக்கள் இதனை கண்டறிந்துள்ளது. இந்த அளவு பாதுகாப்பு வழங்கப்பட்டு, இலங்கைக்குள் வந்து சென்ற சீனர்கள் யார் ? இந்த விடையம் தற்போது கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.