சொந்த தந்தை என அறியாமல் நபருடன் பழகி வந்த இளம்பெண்!

அமெரிக்காவில் தத்துக் கொடுக்கப்பட்ட பெண் ஒருவர் பேஸ்புக் உதவியுடன் தமது பெற்றோருடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தவர் தற்போது 32 வயதாகும் மிட்செல். இவரே பேஸ்புக் உதவியுடன் தமது பெற்றோரை கண்டுபிடித்துள்ளார்.

மிட்செல் பிறந்த சில மணி நேரத்திலேயே அப்போதைய சூழல் காரணமாக கலிபோர்னிய தம்பதிகளுக்கு அவர் தத்துக்கொடுக்கப்பட்டுள்ளார்.

ஆண்டுகள் பல கடந்த நிலையில், மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்த போதும், தமது ரத்த பந்தங்கள் எப்படி இருப்பார்கள் என தெரிந்துகொள்ளும் ஆர்வம் அவருக்கு இருந்து வந்துள்ளது.

தொடர் முயற்சிகளுக்கு பின்னர் தம்மை பிரசவித்த தாயாரை பேஸ்புக் மூலம் அவர் கண்டுபிடித்துள்ளார். ஆனால் அவரது தந்தையின் முழுமையான பெயர் தெரியாமல் போனதால் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் போனது.

இதனையடுத்து 80 பவுண்டுகள் செலவிட்டு டி.என்.ஏ சோதனைக்கு முயற்சி மேற்கொண்டுள்ளார் மிட்செல். இதில் வியக்கவைக்கும் வகையில் மிட்செலின் உறவினர் குறித்தும் தந்தை தொடர்பிலும் தகவலை தெரிந்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து Greg Hicks என்ற நபருக்கு உருக்கமான ஒரு கடிதத்தை எழுதி அனுப்பியுள்ளார். கிரெக் உடனடியாக அதற்கு பதிலும் அனுப்பியுள்ளார்.

காரணம் இதுபோன்ற முறைகேடு சம்பவங்கள் அமெரிக்காவில் சாதாரணமாக நடைபெற்று வருவது தான்.

இருப்பினும் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில், தாம் யார் எனவும் தமது வளர்ப்பு பெற்றோர் தொடர்பிலும் விளக்கமாக குறிப்பிட்ட நிலையில் கிரெக் தமது மகளை அடையாளம் கண்டுகொண்டுள்ளார்.

பிறந்து 32 ஆண்டுகளுக்கு பின்னர் தமது தந்தையை நேரில் பார்ப்பது உண்மையில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வு என கூறும் மிட்செல்,

தமது நீண்ட நாளைய கனவு ஒன்று நிறைவேறிய தருணத்தை வாழ்க்கையில் மறக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.