உந்துருளி மதிலில் மோதி கோர விபத்து…..! இளம் குடும்பஸ்தர் பரிதாபமாகப் பலி….!!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் கொங்கிறிட் தூணில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.ஆரையம்பதியைச் சேர்ந்த இளம் கும்பஸ்தவரான இராசதுரை ஜீவநாதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் உறவினர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வீதியில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மற்றும் வேலியில் நாட்டப்பட்டிருந்த கொங்கிறிற் தூணில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றொருவர் படுகாயமடைந்தார்.

விபத்தில் படுகாயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதேவேளை உயிரிழந்தவர் அண்மையில் திருமணமாகியவர் எனவும் தெரியவந்துள்ளது.