அர்த்தம் தெரியாதவர்களே எதிர்க்கின்றனர்- ராஜித சேனாரத்ன

அதிகாரப்பகிர்வின் முழுமையான அர்த்தத்தை புரிந்து கொள்ளாதவர்கள் தான், புதிய அரசியலமைப்புக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அதிகாரத்துக்கு வருவதற்கும், அதனை தக்கவைப்பதற்கும் அரசியல்வாதிகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டதால் தான் நாடு போருக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. 1950களில் இருந்து இந்த நிலை தான் காணப்பட்டது.

புதிய அரசியலமைப்பு வரைவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றவர்களில் பெரும்பாலானவர்கள், ஒற்றையாட்சி  அரசு அல்லது சமஷ்டி அரசில் அதிகாரப் பகிர்வு பற்றி தெரியாமல் இருப்பவர்கள் தான்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.