பிரபாகரனின் ஒளிப்படத்துடன் தவறான செய்தி! யாழ் வாரப்பத்திரிகைக்கு நடந்த கதி….!!

தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­ கள் அமைப்­பின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னின் ஒளிப்­ப­டத்­து­டனும் பொருத்­த­மற்ற தலைப்­பு­டனும் வாரப் பத்­தி­ரி­கை­யில் வெளி­யான செய்­தி­யால் அந்­தப் பத்­தி­ரி­கை­யின் பிர­தி­ககளை யாழ் இளைஞர்கள் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர்.

வாரப் பத்­தி­ரி­கை­யின் முகப் புப் பக்­கத்­தில் விடுத­லைப்­பு­லி ­கள் உறுப்­பி­னர்­கள் மத்­தி­யில் தலை­வர் வே.பிர­பா­க­ரன் நடந்து வரும் படத்தைப் பிர­சு­ரித்து ‘இரவு இரண்டு மணிக்கும் பெண் கேட்ட தேசிய தலை­வர்’ என்று தலைப்­பி­டப்­பட்ட நிலை­யில் பத்­தி­ரிகை வெளி­யாகி உள்­ளது.

செய்தித் தலைப்­பு­டன் தொடர்­பு­டைய செய்­தி­யா­னது இந்­தி­யாவைச் சேர்ந்த முச்­சக்­கர வண்டிச் சார­தி­யான சங்­கர் என்­ப­வ­ரது கதை­யா­கும். சங்­கர் ஒரு தொடர் கொலை­களை செய்த கொலை­யா­ளி­யின் வாக்குமூலம் என செய்தி வெளி­யா­கி­யுள்­ளது.

குறித்த செய்­திக்கு இடப்­பட்ட தலைப்பு மற்­றும் படம் என்­பன வேண்­டும் என்றே போடப்­பட்­டன என்று தெரி­வித்தே, பருத்­தித்­துறைப் பகு­தி­ க­ளில் பத்­தி­ரி­கை­யின் பிர­தியைத் தீயிட்டுக் கொளுத்தி தமது எதிர்ப்பை அந்­தப் பகுதி மக்­கள் வெளிக்­காட்­டி­யுள்ளனர்.தமிழ் மக்­கள் மத்­தி­யில் தேசியத் தலை­வர் என்­றால் வே.பிர­பா­க­ரனே ஞாப­கத்­துக்கு வரும் நிலை­யில், வேண்­டும் என்றே தமிழ் மக்­க­ளின் மனதைப் புண்­ப­டுத்­தும் நோக்­கு­டன் இந்­தச் செய்தி வெளி­யி­டப்­பட்டுள் ­ளது என்று அந்­தப் பகுதி இளை­ஞர்­கள் தெரி­வித்­த­னர்.