பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படாவிடின், பால்மா இறக்குமதியை நிறுத்தப் போவதாக பால்மா இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பால்மா இறக்குமதிகளின் போது, தற்பொழுது 30 தொடக்கம் 40 சதவீம் நட்டம் ஏற்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உலக சந்தையில் பால்மா விரல ஏறிக் கொண்டே செல்வதாகவும், மெற்றிக் தொன் ஒன்றின் விலை 3,350 என்றும், இன்னும் சில நாள்களில் அது 3இ500 ஐ அண்மித்துவிடுமென்றும் தெரிவித்துள்ளனர்.
பால்மா கிலோகிராம் ஒன்றுக்கு 170 ரூபாய் வரி செலுத்தப்படுவதாகவும், இலங்கையில் பால்மாவின் வரியை நூற்றுக்கு 40 சதவீதமாக குறைத்துள்ளதாகவும், பால்மா இறக்குமதியாளர் சங்கத்தமின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.