மனித உடலிலேயே கல்லீரல் தான் முக்கியமான உறுப்பு. உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல்வேறு முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுவதும் இதுவே. நம் உடலில் இருந்து நச்சுக்களை அகற்றும் பெரிய வேலையை கல்லீரல் செய்துக் கொண்டிருக்கிறது.
புகைப்பழக்கம், ஆல்கஹால், கண்ட உணவுகள், அசுத்தமான சுற்றுப்புற சூழல் போன்றவை நுரையீரல் மற்றும் கல்லீரல் பாதிப்படைய முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
கல்லீரலில் உள்ள பிரச்சனை முற்றினால், உயிரைக் கூட இழக்க நேரிடும். கல்லீரல் பிரச்சினையை முற்றிலும் தடுப்பதற்கு இயற்கை வைத்தியங்கள் உள்ளன.
*கிருமி நாசினியான மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. மேலும் தினமும் பாலில் சிறிது மஞ்சளை கலந்து குடித்து வந்தால் கல்லீரலை சுத்தம் செய்யலாம்.
*முளைக்கீரையில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் கே, வைட்டமின் எ, பொட்டாசியம் ஆகியவை அதிகம் இருப்பதால் அதனை தினமும் சாப்பிட்டால் கல்லீரலை எளிதாக சுத்தம் செய்து விடலாம்.
*தினமும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால் பல விதமான நோய்களில் இருந்து தப்பிக்க முடியும். மேலும் இதில் உள்ள வைட்டமின் சி கல்லீரலை சுத்தம் செய்ய உதவும்.
*பல நோய்களுக்கு தீர்வு தரும் அதிமதுரம் டீயை தினமும் 1 வேலை குடித்து வந்தாலே கல்லீரல் கோளாறுகள் வரமால் தடுக்க முடியும்.
*இஞ்சியில் உள்ள Gingerols என்ற மூல பொருள் கல்லீரல் கொழுப்புக்களை அகற்றி விடும்.
*கிரீன் டீயை தினமும் குடித்து வந்தால் அதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் கல்லீரலை சுத்தம் செய்துவிடும்.