பொதுவாக நீரிழிவு இரண்டு வகைப்படும். இரண்டு விதமான பாதிப்பிற்கும் வெவ்வேறு காரணிகள் மற்றும் அபாயங்கள் உள்ளன.
டைப் I நீரிழிவு இந்த வகை நீரிழிவு எந்த வயதில் உள்ளவர்களையும் பாதிக்கும். குறிப்பாக, குழந்தைகள், பதின் பருவத்தினர், இளம் வயதினர் ஆகியோரை பாதிக்கிறது.
டைப் II நீரிழிவவு இது பொதுவாக வயதானவர்களை அதிகம் பாதிக்கிறது. 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் டைப் II நீரிழிவால் பாதிக்கப்படுகின்றனர்.
அந்தவகையில் டைப் II நீரிழிவால் அவதிப்படுபவர்களுக்கு இயற்கைமுறையிலான ஜூஸ்கள் பெருதும் உதவுகின்றது. தற்போது இந்த நீரழிவை தடுக்கும் ஜூஸை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- பசலைக் கீரை – கை நிறைய 3
- செலெரி தண்டுகள் – 2
- கேரட் – 1
- க்ரீன் ஆப்பிள் – 1
- வெள்ளரிக்காய் (தேவைப்பட்டால்) – 1
செய்முறை
முதலில் ஆப்பிள் மற்றும் கேரட்டை தோல் சீவிக் கொள்ளவும்.
இவை இரண்டையும் நன்றாக அரைத்து பின் மேலே கூறிய மற்ற பொருட்களை இதனுடன் சேர்க்கவும்.
சிறிது அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
இந்த ஜூஸ்களை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகுவதால் டைப் II நீரிழிவு பாதிப்பு குறைய உதவுகிறது.
இந்த ஜூஸ் பருகிவதனால் கிடைக்கும் நன்மைகள்
கேரட்டில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் இது உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய சோடியம் அளவை சமநிலைப்படுத்த உதவுகின்றது
உடலில் இரத்த அளவை ஒழுங்குபடுத்தி, நீரிழிவு நோயாளிகள் பார்வைக் கோளாறால் பாதிக்கப்படுவதைத் தடுக்க உதவுகிறது.
பசலைக் கீரையில் கால்சியம், பீட்டா கரோடின், வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளதால் இவை உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகள் புரிகின்றனது.
இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
செலெரி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் கொண்டதால் இது இதயத்திற்கு நன்மைகளைத் தருகிறது.
நீங்கள் இதில் க்ரீன் ஆப்பிளை சேர்க்கும் போது இதில் இருக்கும் மாலிக் அமிலத்தின் காரணாமாக இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.