சென்னை மாதவரம் பால்பண்ணையை அடுத்த சின்னமாத்தூர் அருளானந்தம் நகரில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். 26 வயது நிறைந்த இவர், சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு பாலகிருஷ்ணன் தான் வசிக்கும் பகுதியை சேர்ந்த சவுந்தர்யா என்ற 23 வயது பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் அதே பகுதியில் தனது குடும்பத்தை விடுத்து தனியாக வசித்து வந்துள்ளனர்.
தற்போது சவுந்தர்யா நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு கோலாகலமாக வளைகாப்பு நடத்தப்பட்டது. பின்னர் அவர் அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாலகிருஷ்ணன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இதுகுறித்து தகவலறிந்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் , கணவன் மனைவி தகராறு காரணமாகவே பாலகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டார் என கண்டறிந்தனர்.
பாலகிருஷ்ணன் தனது மனைவிக்கு வளைகாப்பு நடத்த வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். இதையறிந்த சவுந்தர்யா, எதற்காக கடன் வாங்கி வளைகாப்பு நடத்தினீர்கள்? என கணவனிடம் சண்டை போட்டுள்ளார்.மேலும் இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மனம் உடைந்த பாலகிருஷ்ணன், நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட காதல் மனைவி கதறி அழுதுள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.