அடுத்தடுத்து தொடரும் போராட்டம்.! அறிவிப்பை வெளியிட்ட அடுத்த அமைப்பு.!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தகடையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் உயர்மட்ட கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நிறைவு பெற்றவுடன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தனர்.

நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள பொது நல வழக்கின் காரணமாக எங்களது போராட்டமானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட அறிவிக்கப்பட்டுள்ளது. எங்களது போராட்டத்திற்கு தடைவிதிக்கவும் நீதிமன்றமானது மறுப்பு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வரும் 11 ம் தேதிக்குள் எங்களது 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிவிட வேண்டும்., 7 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் வரும் 22 ம் தேதிமுதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அதிரடியாக தொடங்குவோம்.

அதே போல் தொடக்கப்பள்ளியை உயர்நிலைக்கல்வியுடன் இணைப்பது குறித்து முடிவை கைவிடவில்லை என்றால் எங்களது அமைப்பினர் ஒட்டுமொத்தமாக கவல்வித்துறை அமைச்சருக்கு கறுப்புக்கொடி காட்டி., அவரை வேறு துறைக்கு மாற்றம் செய்யக்கூறி போராட்டத்தை துவங்குவோம். மேலும்., அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி வகுப்புகளை தொடங்குவதை அதிரடியாக அரசு கைவிட வேண்டும்.

தற்போது நடைபெறும் நாடுதழுவிய போராட்டத்திற்கும்., எங்களது அமைப்பிற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை., எங்களின் 7 அம்ச கோரிக்கையை நிறைவேற்றினால் அல்லது அதற்கான பேச்சு வார்த்தை நடத்தும் பட்சத்திலேயே தமிழக அரசின் பேச்சுவார்த்தையில் பங்கேற்போம். எங்களது கோரிக்கைகளுக்கு எதிராக அரசு செயல்பட நினைத்தால் பேச்சு வார்த்தைக்கும்., காலதாமதத்திற்கும் இடமே இல்லை.

அதிரடியாக காலவரையற்ற போராட்டத்தை கையில் எடுத்து செயல்படுவோம்., எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தமிழக அரசும்., நீதிமன்றமும் எங்களுக்கு ஏமாற்றத்தையே வழங்கியுள்ளது என்று கூறினார்.