யாழ்.ஊரெழுப் பகுதியிலுள்ள தோட்டக் காணியொன்றில் புல்லு வெட்டிக் கொண்டிருந்த குடும்பஸ்தரொருவர் திடீரென மயங்கி நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பருத்தித்துறை வீதி,நல்லூரைச் சேர்ந்த சின்னத்துரை சசிகரன்(வயது-46) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
ஊரெழுப் பகுதியிலுள்ள தோட்டக் காணியொன்றில் வேலை செய்வதற்காக நேற்று முன்தினம் (06) சென்ற குறித்த குடும்பஸ்தர் அங்கு புல்லு வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி நிலத்தில் விழுந்த அவரைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஏனையோர் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.