கிழக்குமாகாணத்திற்கென புதிதாக நியமனம் பெற்றுள்ள இனவாத ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கிழக்குமாகாணத்திலுள்ள அரச காணிகளது தரவுகளை உடனடியாக தமக்கு வழங்கும்படி கிழக்குமாகாணத்திலுள்ள அனைத்து அரசகாரியாலயங்களிலும் கோரியுள்ளார் என நம்பகமான தகவல் ஒன்று எமக்கு தற்போது கிடைத்துள்ளது.
கிழக்கு தமிழர்கள், அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் அரசியல்வாதிகளோ, தமிழ் அரச அதிகாரிகளோ யாராலும் தம்மை மீட்க முடியாது என தமிழ் மக்கள் வருத்தத்தில் உள்ளனர்.
கிழுக்கு மாகாண ஆளுனராக ஹிஸ்புல்லா நேற்று பதவி ஏற்ற உடன் முதல் பெக்ஸ் போனது திருகோணமலை நகரசபை பகுதியிலுள்ள அரச திணைக்களங்களில்??
கிழக்கு மாகாணம் எனும் போது அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை மூன்று மாவட்டத்தை உள்ளடக்கியது இதிலுள்ள முக்கிய அரச உயர் திணைக்களங்கள் திருகோணமலையில்தான் உள்ளது.
நேற்று காத்தான்குடி ஹிஸ்புல்லா திருமலை ஆளுனர் அலுவலகத்தை கைப்பற்றிய உடன் அவர் வருகையை பதிவேட்டில் கையொப்பம் வைத்த உடன் முதல் அவர் நினைவுக்கு சடுதியாக வந்தது வட – கிழக்கை இணைத்தால் இரத்த ஆறு ஓட வைப்பன் என பாராளமன்றில் கூறினார்.
இதை அவர் மறுவழிமுறையினூடாக தற்போது நிறைவேற்ற தயராகியுள்ளார் அதன் பிண்ணணியில் பல சதிகள் நிறைந்துள்ளது. உங்களுக்கு தெரியும் அம்பாரை மட்டக்களப்பில் வாழும் தமிழர் பூர்விகம் பெரும்பாலும் மட்டக்களப்பு தமிழர் என கூறுவது வழமை காரணம் அவர்களது கோயில் சடங்குகள், பேச்சு வழக்குகள் ,தொழில்முறைகள் பெரும்பாலும் ஒரே மாதிரி சிலவேளை மட்டக்களப்பு மாவட்டத்தைதான் நிலத்தொடர்பில் பிரிந்து பிற்காலத்தில் அம்பாரை மாவட்டம் உருவாகியது,அப்படியென்றால் அம்பாரை தமிழரும் தம்மை மட்டக்களப்பார் என கூறுவது தவறில்லே சரி தற்போது ஹிஸ்புல்லாவுக்கும் இவ் வரலாறு அலசி ஆராய காரணம் யாது ????
நாம் மேலே இரு மாவட்டத்தை பற்றி கூறிவிட்டோம் ஆனால் கிழக்கில் மற்றொரு மாவட்டமான திருகோணமலை பற்றி கூற மறந்து விட்டோம் இங்குதான் விடயமே உள்ளது,திருகோணமலை மாவட்டத்தை பொருத்தவரை நகரமும் பட்டினமும் சூழலிலுள்ள வசிக்கும் ஒரு இலட்சம் மேற்பட்டோர் தமிழர் வசிக்கின்றார்கள் இதில் 90%வீதமான தமிழர் பூர்விகம் வடக்கை சார்ந்த தமிழர் பெரும்பாலும் இணைந்த வடகிழக்கு மாகாணசபை ஆட்சி காலத்திலும் யுத்த காலத்திலும் எல்லா அரச திணைக்களத்திலும் தமிழராக இருந்தார்கள்.
இங்கு உயர் அரச திணைக்களம் வசிப்பிடம் இருந்ததால் திருகோணமலை நகரத்திலே வசித்தார்கள் அத்தோடு அவர்கள் பிள்ளைகள் கற்கும் பாடசாலைகள் இங்கு நிலைநிறுத்தியதாலும் திருகோணமலை நகரசபையில் வசிக்கும் தமிழர் கற்ற சமூகமாகமும் இதிலுள்ள அரச திணைக்களத்திலும் தற்போதும் கடமையாற்றுகின்றார்கள்.
ஹிஸ்புல்லா அமைச்சராகயிருந்த போது இங்குள்ள அரச திணைக்களத்தில் இங்குள்ள வெற்றிடங்களை முஸ்லிம்களை நியமனம் செய்தார்.
தற்போது ஆளுனராகிய உடன் முதல் பெக்ஸ் போனது திருமலை நகரசபை அலுவலகத்தில் எத்தனை பேர் தமிழர், முஸ்லிம் உள்ளார்கள் என கேட்டு அதில் எத்தனை தமிழர் வடக்கு மாகாணத்தை சேர்ந்தோர் என தகவல் கேட்டு அனுப்பியுள்ளார் இதுதான் ஹிஸ்புல்லா இரத்த ஆறு விடயமும் கிழக்கில் தமிழர் விகிதத்தை அழிக்க தொடங்கியுள்ள விடயத்தை உணரலாம்.
ஒவ்வொரு அலுவலகத்திலும் பத்து, இருபது தமிழர் வடக்குமாகாண தமிழராக இருப்பதுடன் எல்லா தமிழரையும் சேர்த்தால் பத்தாயிரம் மேற்பட்ட இவர்களை கட்டாய இடமாற்றத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் அதிகாரத்தை பயன்படுத்தி வடமாகாணத்தில் அனுப்பினால் அவ்விடத்தின் வெற்றிடத்திற்கு புதிதாக முஸ்லிம் நியமனம் செய்தால் போதும் கிழக்கை வடக்கோடு இணைக்காமல் தமது காரியத்தை சாதிக்கலாம் என்பதை நேற்றைய ஹிஸ்புல்லாவின் ஆளுனர் அதிகாரம் தொடங்கிவிட்டது.
இதிலிருந்து நாம் பலவற்றை புரியலாம் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முஸ்லிம் ஒருவரை ஆளுனராக நியமித்ததால் அவரது அதிகாரத்தில் அரச ஊழியர் இடமாற்ற சபை இறுதி முடிவு பயன்படுத்தி பல தமிழ் உத்தியோகத்தர் வெளி மாகாணத்தில் இடமாற்றம் செய்யப்படும் இவ்விடங்களுக்கு புதிய நியமனம் முஸ்லிங்களால் பூரணப்படுத்தப்படும்.
இணைந்த வடகிழக்கு பிரிந்த பின் கிழக்கு மாகாணசபை தனிய இயங்கியும் தமிழர் பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி அதிகரித்துள்ளது
சாரதிகள் நியமனம், நீர்பாசன திணைக்களம், விவசாய திணைக்களம், சுதேச மருத்துவம், கல்வி திணைக்களம், பொதுச்சேவை திணைக்களம், உள்ளுராட்சி திணைக்களம் அத்தனையிலும் 8ம் வகுப்பு மாத்திரம் படித்த முஸ்லிம்களிலிருந்து உயர்தரம் சித்தியடைந்தவர்கள் வரை நியமிக்கப்பட்டுள்ளார்கள்..