உணவு பிரியர்களின் ஸ்பெஷல் மற்றும் சுவையான உணவாக இருப்பது இந்த பாயசம், அதிலும் ஐஸ்க்ரீமும் கலந்து இருப்பது, டபுள் கொண்டாட்டத்தை கொடுக்கும். எவ்வாறு செய்யலாமென பார்க்கலாம்.
சேமியா ஒரு கப்
ஜவ்வரிசி அரை கப்
ஐஸ்கிரீம் மூன்று ஸ்கூப்
காரட் ஜூஸ் அரை கப்
சர்க்கரை ஒன்றரை கப்
முந்திரி பாதம் பிஸ்தா
நெய் 3 டீஸ்பூன்
காய்ச்சிய பால் அரை கப்
ஏலக்காய்த்தூள் சிறிதளவு,
செய்முறை:
ஜவ்வரிசியை முதலில் நன்றாக வேகவைக்கவும். பின்னர், அதனுடன் சேமியாவை சேர்த்து கொதிக்க வைத்து வேகவிடவும்.
ஒரு பாத்திரத்தில் காய்ச்சிய பால் மற்றும் ஐஸ்கிரீமை சேர்த்து நன்கு அடித்து எடுத்து கொள்ளவும்.
ஜவ்வரிசி மற்றும் சேமியா வெந்தவுடன் அதில் வறுத்து வைத்த கேரட் ஜூஸ் கலந்து நன்கு கலக்கவும்.பின் அதனை ஐந்து நிமிடம் அடிப்பிடிக்காமல் கிளறவும்.
இதனுடன் பாலை சேர்த்து கலக்கியபின்னர், நெய்யில் முந்திரி பாதாம் பிஸ்தா போட்டு நன்கு வறுத்து இதனுடன் சேர்த்தால் சுவையான ஐஸ்க்ரீம் பாயாசம் ரெடி.
இதனை குளிர வைத்து பின்னர் சாப்பிட்டால் அப்படி ஒரு சுவையான இருக்கும்.