இந்திய வீரர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!

இந்திய கிரிக்கெட் அணியின் 71 ஆண்டுகால ஏக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் ஆஸ்திரேலிய தொடரில் அசத்தலான வரலாற்று வெற்றியினை இந்தியா பெற்றது. ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக ஆசிய அணி 2-1 என்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதனை கௌவரவிக்கும் விதமாக பிசிசிஐ இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, பரிசுத்தொகைகளை வீரர்கள், பயிற்சியாளர்கள், துணை நிலை ஊழியர்கள் என அனைவருக்கும் அறிவித்துள்ளது.

ஊக்கப்பரிசு விவரமானது, விளையாடும் லெவனில் இடம்பெற்ற வீரர்களுக்கு ஆட்டம் ஒன்றுக்கு ரூ.15 லட்சமும், விளையாடாத வெளியில் இருந்த வீரர்களுக்கு ரூ.7.5 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஊதியத்துடன் கோலி, ரஹானே, புஜாரா, ஷமி, பும்ரா, பாண்ட் ஆகியோர் அதிகபட்சமாக 60 இலட்சம் பெறுவார்கள். ஒரு போட்டியிலும் இடம்பெறாத பார்திவ் படேல் குறைந்தபட்சமாக 30 இலட்சம் பெறுகிறார்.

அதற்கு அசுத்த படியாக தலைமை பயிற்சியாளர் உட்பட அனைத்து நிலை பயிற்சியாளர்கள் ஓவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர் அல்லாத உதவியாளர்கள் அவர்களது ஊதியத்தினை ஊக்கப்பரிசுத் தொகையாகப் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.