யாழில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு?

எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சிறுவர் பெண்கள் குற்றப்பிரிவில் கடமையாற்றிய அநுராதபுரத்தைச் சேர்ந்த என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.

ஒரு வாரத்துக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று காலை உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவரது உடல் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு உறவினரிடம் கையளிக்கப்பட்டது

எலிக்காய்ச்சல் காரணமாக அவருக்கு உயிரிழப்பு ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.