ஐக்கிய அமீரகத்தின் துபாயில் 13 வயது சிறுமியை பாலியல் விடுதிக்கு விற்பனை செய்த 49 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டவரான அந்த நபரின் நிர்பந்தத்தால் பல்வேறு நாட்டவர்களான 11 பேருடன் ஒரே நாளில் படுக்கை பங்கிட்டதாக குறித்த சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.
அந்த பாலியல் விடுதியில் வாடிக்கையாளரான 25 வயது இளைஞர் குறித்த சிறுமி மீது காதல் வயப்படவும், சிறுமியின் நிலையை அந்த இளைஞர் துபாய் பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துபாய் பொலிசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் குறித்த சிறுமியை அந்த பாலியல் விடுதியில் இருந்து காப்பாற்றியுள்ளனர்.
பலமுறை சிறுமியின் ஒப்புதலுடன் குறித்த இளைஞர் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதாக பொலிசாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து அந்த இளைஞர் மீதும் வழக்குப் பதிந்துள்ளனர். சிறுமியின் தந்தை என கூறி 49 வயதான பாகிஸ்தான் நாட்டவரே அந்த பாலியல் விடுதிக்கு சிறுமியை ஒப்படைத்துள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் மீது ஆட்கடத்தல், பாலியல் விடுதி நடத்தியது, பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர்.
2 ஆண்டுகளுக்கு முன்னரே குறித்த நபர் சிறுமியை அந்த பாலியல் விடுதிக்கு அழைத்து வந்துள்ளார். தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு அவரை அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஒரே நாளில் பல்வேறு நாட்டவர்களான 11 பேருடன் படுக்கை பங்கிட்டதே தமது வாழ்க்கையில் தாம் இதுவரை சந்தித்த மிகக் கொடூர நாள் என அந்த சிறுமி பொலிசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சிறுமியின் சகோதரரிடன் கைதான இளைஞர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதில், சிறுமியை 2 லட்சம் ரூபாய்க்கு அந்த 49 வயது நபரிடம் அடகு வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமது சகோதரியை காப்பாற்றவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த இளைஞர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.