மலேசிய மன்னரின் ரஷ்ய அழகியான மனைவி கர்ப்பம்!

முன்னாள் உலக அழகியை மணந்த மலேசிய மன்னர் தனது பதவியைத் துறந்த செய்தி வெளியான இரண்டே நாட்களில், அவர் மனைவி தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ரஷ்ய அழகியான Oksana Voevodina (25), தனது கணவருடன் நடனமாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ள நிலையில், அவர் தற்போது கர்ப்பமுற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருமணமான உடனேயே Sultan Muhammad V (49), தனது மனைவியை அழைத்துக் கொண்டு ஜேர்மனியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றதாக செய்திகள் வெளியான நிலையில், குழந்தைகள் மீது மிகுந்த விருப்பம் கொண்ட அவர், தங்கள் இருவருக்கும் இடையில் 24 வயது வித்தியாசம் இருப்பதால், தங்கள் இனப்பெருக்க நலன் குறித்து பரிசோதனைகள் மேற்கொள்வதற்காகவே ஜேர்மனிக்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

இரண்டே ஆண்டுகள் மன்னராக பதவி வகித்த நிலையில், தனது மன்னர் பதவியை துறப்பதாக அறிவித்தார் Sultan Muhammad. அவர் எதற்காக மன்னர் பதவியை துறக்க முடிவு செய்தார் என்பதற்கான காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை.

மன்னரின் மனைவியாகியிருக்கும் முன்னாள் மொடலும், மிஸ் மாஸ்கோ பட்டம் பெற்றவருமான Voevodina, ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்றபோது, நேரலையில் தனது கூட்டாளியான ஆண் நண்பருடன் பாலுறவு கொண்டதாக செய்திகள் வெளியானதோடு, அவர் நீச்சல் குளம் ஒன்றில் ஒரு ஆணை அணைத்து முத்தமிடும் புகைப்படங்களும் வெளியாகின.

ரஷ்ய அழகியும் மொடலுமான Voevodinaவை மணந்தது மன்னரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதா என கேள்விகள் எழுந்தன.

Voevodinaவை மணம் செய்ததால் மன்னர் பலரது கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளான நிலையில், இந்த கவர்ச்சிப் படங்களும் செய்திகளும் வெளியானதும், அதனால்தான் மன்னர் தனது பதவியைத் துறந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.

இத்ற்கிடையில், தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்க்கும் தம்பதியினர், தங்கள் முழு நேரத்தையும் தங்கள் குழந்தைக்காகவே அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளதாக ரஷ்ய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.