திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் மகாலட்சுமி நகரை சார்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 32)., இவரது மனைவியின் பெயர் லாவண்யா. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று ஒன்றரை வருடங்கள் ஆகின்றது.
இவர்கள் இருவரும் காலையில் நீண்ட நேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வராததால்., வீட்டின் கதவை பலமுறை அக்கம்பக்கத்தினர் தட்டி பார்த்துள்ளனர். இதில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாததால்., வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளனர்.
அந்த நேரத்தில் கணவன் – மனைவி இருவரும் சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கவே., சிறிது நேரம் கழித்து சுதாரித்து சம்பவம் குறித்து பல்லடம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த காவல் துறையினர் கணவன் மற்றும் மனைவியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்., இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.