வரும் வெள்ளிக் கிழமை யாரும் எதிர் பாராத அதிரடி அறிவிப்பு – மைத்திரி

ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்றும் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வெள்ளியன்று வெளியாகும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் இடம்பெற்ற அரசியல் ஸ்திரமற்ற நிலையை தொடர்ந்து பலரும் தேர்தலை நடத்துமாறு கோரி வருகின்றனர்.

குறிப்பாக மஹிந்த சார்பு காட்சிகள் பொது தேர்தலையும் மாகாண சபை தேர்தலையும் விரைவில் நடத்துமாறு கூறி வருகின்ற நிலையில், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சில சிறுபான்மை கட்சிகளும் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளன.

இருப்பினும் இந்த ஆண்டு தேர்தல் ஆண்டு என இரு தரப்பினரும் கூறி வருகின்ற நிலையில், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்த 31 ஆம் திகதி அனைத்து மாகாண ஆளுநர்களையும் பதவி விலகுமாறு உத்தரவிட்ட ஜனாதிபதி கடந்த இரு வாரங்களில் 8 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்தார்.

குறித்த விடயமும் ஜனாதிபதியின் தேர்தலுக்கான அடுத்தகட்ட நடவடிக்கையாக இருக்க கூடும் என்றும் அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.