இது என்ன உங்க கட்சிப் பணமா ? அள்ளிக் கொடுப்பதற்கு…! ஐ கோர்ட் சராமரி கேள்வி…!

தமிழகத்தில் வருடம் தோறும், பொங்கல் பரிசாக, இலவச வேட்டி, சேலை, பொங்கல் பொருட்களை ரேசனில் வழங்கி வருகிறது தமிழக அரசு.

இந்த முறை, அதிரடியாக, அனைத்து ரேசன் கார்டுகளுக்கும், 1000 ரூபாய் பரிசுப் பணம் என்று அறிவிக்கப் பட்டது. இதை வாங்குவதற்காக, ரேசன் கடைகளில், மக்களிடையே, தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதற்கிடையில், இந்தப் பணம் வழங்கப்படக் கூடாது, என்று, கோவை வெள்ளலுாரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் ஏசுதாஸ் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த, உயர் நீதி மன்றம், தமிழக அரசுக்கு, சராமரியாக கேள்விகளை விடுத்துள்ளது. இப்போது இந்த ஆயிரம் ரூபாய் பணம் வழங்க வேண்டிய அவசியம் என்ன? இது என்ன உங்கள் கட்சிப் பணமா? வாரி இறைப்பதற்கு…! இது மக்களின் வரிப் பணம். அரசாங்கத்திற்குச் சொந்தமானது.

இந்தப் பணம், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டுமே போய்ச் சேர வேண்டும், என்று உயர் நீதி மன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.