இந்தக் கிரகத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் வேறுபட்ட பண்புகளை உடையவராய் இருக்கின்றனர், ஆனால் ஒரு சில ஒற்றுமைகள் உள்ளன, இவை எண்களின் அடிப்படையில் 9 வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
மக்களின் குணாதிசயங்களைப் பற்றி நிறைய பதிவுகளை நாம் பல வலைத்தளப் பக்கங்களில் படித்திருக்கலாம். ஆனால் இந்த பதிவு ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் காதல் மற்றும் திருமண விருப்பத்தைப் பற்றி கவனம் செலுத்துகிறது.
சிலர் உணர்ச்சிகளோடு தொடர்பு கொண்டு இருக்கின்றனர், சிலர் நடைமுறை அன்புடன் இருக்கின்றனர், இன்னும் சிலர் அழகின் பின்னே ஓடிக் கொண்டு இருக்கின்றனர். இப்படி பல்வேறு வகை மனிதர்கள் இந்த பூமியில் நிறைந்துள்ளனர்
பிறந்த நாள் இவை எல்லாமே உங்கள் பிறந்த நாளைச் சார்ந்து உள்ளது. உலகெங்கிலும் உள்ள மக்களை 9 வகையாக பிரிப்பதை விட இது கடினமானது. ஆனால் ஒவ்வொரு நாளுக்குரிய பலன்களையும் விவரிப்பது என்பது இயலாத காரியம். நீங்கள் எண் கணிதம் கற்ற பின்னர் பிறப்பு திகதியிலிருந்து ஒரு நபரை பகுப்பாய்வு செய்யலாம்.
ஒரு நபரின் பிறப்பு எண், விதி எண், பெயரின் எண், ராசி, பிறந்த மாதம் மற்றும் வருடம் ஆகியவற்றை சார்ந்து அவரின் குணாதிசயம் அமைகிறது.
பிறந்த நாள் எண்கள் நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர் என்றால் உங்கள் எண் 1. நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய திகதிகளில் பிறந்தவர் என்றால், உங்கள் எண் 2. நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய திகதிகளில் பிறந்தவர் என்றால், உங்கள் எண் 3. நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய திகதிகளில் பிறந்தவர் என்றால், உங்கள் எண் 4 நீங்கள் 5, 14, 23 ஆகிய திகதிகளில் பிறந்தவர் என்றால், உங்கள் எண் 5 நீங்கள் 6, 15, 24 ஆகிய திகதிகளில் பிறந்தவர் என்றால், உங்கள் எண் 6 நீங்கள் 7, 16, 25 ஆகிய திகதிகளில் பிறந்தவர் என்றால், உங்கள் எண் 7 நீங்கள் 8, 17, 26 ஆகிய திகதிகளில் பிறந்தவர் என்றால், உங்கள் எண் 8 நீங்கள் 9, 18, 27 ஆகிய திகதிகளில் பிறந்தவர் என்றால் உங்கள் எண் 9
எண் 1 க்கான காதல் மற்றும் திருமணம் பற்றிய கணிப்பு
எண் 1 க் கொண்ட நபர்கள், எப்போதும் தலைவராக இருப்பவர்கள். எதையும் முன்னடத்தி செல்பவர்கள். எண்கணித அறிவியல் படி, அவர்களின் துணையை கூட ஆளுவதற்கு முயற்சி செய்கின்றனர். அவர்களின் முடிவே எல்லாவற்றிலும் இறுதியாக நிலைக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
அவர்களின் ராசியைப் பொருத்தும் பல விஷயங்கள் அமையும் என்றாலும், அவர்களுக்கு விருப்பம் இல்லாத எந்த ஒரு செயலையும் செய்ய வைக்க யாராலும் முடியாது. காதலைப் பற்றி சொல்லும்போது, அவர்கள் காதலை கைவிட விரும்புவதில்லை. குழந்தை பருவத்தில் இருந்து விரும்பும் ஒருவரை அவர்கள் பெரும்பாலும் மணமுடிக்கின்றனர். எந்த ஒரு விஷயத்திலும் அவர்கள் சமரசம் செய்வதில்லை, அவர்கள் அசாதாரண மனிதர்களை விரும்புவதற்கு காரணம் அவர்களின் அசாதாரண குணம் என்று அவர்கள் உணர்கின்றனர்.
அவர்கள் உணர்ச்சி பூர்வமாக இருப்பதை விட, நடைமுறையை பின்பற்றுபவராக இருக்கிறார்கள். மேலும் அழகை ஆராதிக்கக்கூடியவர்கள் அவர்கள். நீண்ட நாட்கள் பிரம்மச்சாரியாக இருந்தாலும், யாரவது ஒருவர் கிடைத்தால் போதும் என்ற மனநிலை இல்லாதவர்கள். காதலில் தங்கள் துணையின் மீது எப்போதும் ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கின்றனர். அவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள். எப்போதும் புதிய புதிய சோதனைகளை முயற்சித்துக் கொண்டு இருப்பவர்கள். அவர்கள் எதிலும் உறுதியானவர்கள். ஒன்றாம் எண் நபரை துணையாகக் கொண்டவர்கள் தங்கள் உறவில் நிச்சயம் ஒரு விசுவாசத்தை எதிர்பார்க்க முடியும்.
எண் 2 க்கான காதல் மற்றும் திருமணம் பற்றிய கணிப்பு
2ம் எண் நபர்கள், மிகவும் உணரச்சி மிக்கவர்கள். மனநிலையில் மாறுபாடு கொண்டவர்கள். அவர்கள் துணையுடன் மனநல ரீதியான தொடர்பு உள்ளவர்கள். அவர்கள் உடல் ரீதியான தொடர்பை விட மன ரீதியான தொடர்பு மிகவும் முக்கியம் என்று நினைப்பவர்கள். இந்த நபர்கள், உணர்திறன் அதிகம் கொண்டவர்கள் மற்றும் உயர்ந்த கற்பனைத் திறன் கொண்டவர்கள்.
இவர்களுக்கு அடிக்கடி மனநிலையில் மாற்றம் உண்டாவதால் இவர்களின் துணை நிலையான மனநிலையுடன் இருப்பது நல்லது. இவர்களைப் புரிந்து கொள்ளும் துணை அமைந்தால் மட்டுமே, இவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை மிகவும் திருப்திகரமாக அமையும். இவர்களுக்கு சிற்றின்பத்தின் மேல் அதிக ஆர்வம் இருப்பதில்லை. காதல், ரொமான்ஸ் மற்றும் திருமணம் என்று வரும்போது இவர்கள் இதயம் சொல்லும் வழியில் மட்டுமே இவர்கள் பயணிக்கின்றனர். இதற்கு ஷாருக் கான் ஒரு சிறந்த உதாரணம்.
இவர் வேறு ஜாதி பெண்ணான தனது காதலி கௌரி கானுக்காக தில்லியில் இருந்து மும்பை வரை வந்தார். ஒருமுறை ஒருவரோடு இவர்கள் இணைந்து விட்டால் எளிதில் பிரிய மாட்டார்கள். இவர்கள் மன்மத கலையில் மிகச் சிறந்து விளங்குபவர்கள். இவர்களுடைய சொந்த வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதால் மட்டுமே இவர்களின் தொழிலும் நல்ல முறையில் நடக்க இயலும், காரணம், இவர்கள் சந்தோஷமாக இருந்தால் இவர்களுடைய வேலை சிறப்பாக நடைபெறும்.
எண் 3 க்கான காதல் மற்றும் திருமணம் பற்றிய கணிப்பு
காதல் மற்றும் திருமணம் என்று வரும்போது 3 ம் எண் கொண்ட நபர்களும் 1 ம் எண் நபர்களின் ஒத்த குணநலன்களைக் கொண்டிருப்பார்கள். நடைமுறையை அதிகம் பின்பற்றுபவராக இருப்பார்கள். அவர்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் பெரும்பாலும் இதயம் சொல்வதை ஏற்க மாட்டார்கள்.
3ம் எண் நபர்கள் பயமற்றவர்கள். குறிக்கோள் மிகுந்தவர்கள். அவர்களுக்கான சட்டத்தை அவர்களே வகுத்துக் கொள்வார்கள். தன்னலம் மிக்கவர்கள். சிறப்பான ஒருவரை மட்டுமே மணமுடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். 2, 6, 7 மற்றும் 8ம் எண் நபர்களைப் போல் ரொமான்ஸ் அதிகம் இல்லாதவர்கள் இவர்கள்.
துணையுடன் அதிக நேரம் செலவழிப்பதை விரும்ப மாட்டார்கள். இவர்களின் முக்கிய விருப்பம் வேலை மட்டுமே. காதலில் தனது துணையின் மீது ஆதிக்கம் செலுத்த நினைப்பார்கள். எல்லா துறையிலும் தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவரோடு நட்பாக அல்லது உறவாக இருக்கும் நபர்கள் தங்களை இரண்டாவதாக உணரும் தன்மை கொள்பவராக இருக்கும்பட்சத்தில் இவர்களின் உறவில் எந்த ஒரு சிக்கலும் இருப்பதில்லை. 3ம் எண் நபருடன் நெருங்கி நேரம் செலவிடும்போது இந்த தன்மைகள் மிகவும் வெளிப்படையாகத் தெரியும்.
எண் 4 க்கான காதல் மற்றும் திருமணம் பற்றிய கணிப்பு
4ம் எண் நபர்கள், வழக்கத்திற்கு மாறானவர்கள். ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணாதிசயம் கொண்டவர்கள். ஆனால் ஜோதிடம் கூறுவதைப் போல் இவர்கள் ரொமண்டிக் தன்மை கொண்டவர்கள் அல்ல. திருமணத்தை தாண்டி பாலியல் தொடர்பு வைத்து கொள்ள விரும்புவார்கள். 4ம் எண் ஆண்கள் அனைவரும் இந்த குணத்தைக் கொண்டிருப்பதில்லை, இவர்களுள் சில ஆண்கள் மிகவும் நேர்மையானவராக இருப்பார்கள், இவர்களின் துணை இவர்களை ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பார்கள். கடலை போடும் நபராக இல்லாமல் உறவுகளில் அர்பணிப்புடன் இருக்கும் தன்மைக் கொண்டவர்கள்.
திருமண உறவைத் தாண்டி வெளியில் தகாத உறவு கொண்டிருந்தாலும் இவர்களின் துணையால் அதனைக் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தனது துணையுடன் அர்பணிப்புடன் விளங்குவார்கள். குறிப்பாக 22ம் தேதி பிறந்தவர்கள் பொதுவாக தனது துணையிடம் அதிக விசுவாசத்துடன் இருப்பார்கள். பொதுவாக 4ம் எண்கள் நபர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள், எளிதில் கோபம் இவர்களை ஆட்கொள்ளும் என்பதால் திருமண முறிவு அல்லது விவாகரத்து உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். திருமணம் குறித்த முடிவுகளில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக திருமணம் மற்றும் உறவு தொடர்பான முடிவுகளில் 4ம் எண் நபர்கள் பொதுவாக அதிர்ஷ்டமில்லாதவர்கள்.
எண் 5 க்கான காதல் மற்றும் திருமணம் பற்றிய கணிப்பு
திருமணத்திற்கு முன் பல பேருடன் தொடர்பு கொள்ளும் குணம் கொண்டவர்கள் 5ம் எண் நபர்கள். இவருடைய துணை சரியானவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்களுக்கு மாற்றம் மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் விருப்பம் இருப்பதால் அடிக்கடி தங்கள் காதலை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். பல திறமைகள் வாய்ந்தவர்களாக இருக்கும் இவர்கள் காதலில் புதிய சோதனைகளை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள்.
காதலில் புதிய வழிகளை கண்டறிய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். உறவில் பாலியல் நோக்கத்தோடு இணைவார்கள். இவர்களின் மனம் வேகமாக வேலை செய்யும் என்பதால் அடிக்கடி தங்கள் மனநிலையை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இவர்கள் எப்போதும் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள் என்பதால் 2 ம் எண் நபரைப் போன்ற நிலையான எண்ணம் கொண்டவரை துணையாகப் பெறுவது நல்லது. மேலும் 8ம் எண் நபர் இவருக்கு நல்ல துணையாக இருப்பார்கள்.
5ம் எண் நபரால் ஒரு காதலை நீண்ட நாட்கள் கொண்டு செல்ல இயலாது. உறவு மற்றும் திருமணம் என்று வரும்போது இவர்கள் நடைமுறை முடிவுகளைப் பெரிதும் எடுக்க நினைக்கின்றனர்.
எண் 6 க்கான காதல் மற்றும் திருமணம் பற்றிய கணிப்பு
எண் 6 என்பது சுக்கிரனின் எண்ணாகும். இந்த கிரகம் காதல் மற்றும் சமாதானத்திற்கான கிரகம் ஆகும். காதல் மற்றும் ரொமான்ஸ் என்று வரும்போது 6 ம் எண் நபர்கள் காந்தம் போல் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவராக இருக்கின்றனர். அவர்கள் மிகவும் உணர்ச்சி மிக்கவர்களாக இருப்பதால் அவர்களே காதலை முன்மொழிகின்றனர். 6ம் எண் நபர் எதையும் கையாளும் திறன் கொண்டவர்கள். திருமணத்திற்கு பின் மற்றொரு புதிய உறவில் ஈடுபடும் வாய்ப்புகளும் உண்டு.
தனது துணையுடன் உணர்வு பூர்வமாக நெருக்கம் உண்டாகாத நேரத்தில் இது போன்ற அந்நிய உறவின் மீது ஈர்ப்பு உண்டாகலாம். இந்த வகை நபர்கள், மன ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் திருமணத்தில் நாட்டம் கொள்ள வேண்டும். 2 ம் எண் நபர்களைப் போல் பாலியல் தொடர்பில் அதிக நாட்டம் இல்லாதவர்கள் இவர்கள். உடல் ரீதியான தொடர்பை விட மன ரீதியான தொடர்பு முக்கியம் என்று நினைப்பவர்கள் இவர்கள்.
பொதுவாக 6 ம் எண் நபர்கள் மிகவும் அழகாக தோற்றமளிப்பதால், இவர்களைச் சுற்றி பெரும்பாலும் எதிர் பாலினத்தவர்கள் சூழ்ந்திருப்பார்கள். இவர்கள் அழகால் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் பண்பைக் கண்டு சக தோழர்கள் பொறாமைப் படுவார்கள். காதல் செய்வதில் வல்லவர்கள்.
எண் 7 க்கான காதல் மற்றும் திருமணம் பற்றிய கணிப்பு
7 ம் எண் நபர்கள் மிகவும் குறைவாக பேசுவார்கள். எப்போதும் ஒரு வித சிந்தனை மற்றும் கனவில் இருப்பார்கள். இதனால் இவரை ரொமான்ஸ் இல்லாதவர் என்று கணிக்க முடியாது. 7ம் எண் கேதுவைக் குறிக்கும். எண்கள் 2 ன் தன்மைகளில் பல இவர்களுடன் ஒத்துப் போகும் என்பதால் இவர்களுடன் இணையக் கூடிய ஒரு சிறந்த எண் 2. 7 ம் எண் நபர்கள் பொதுவாக கனவு உலகத்தில் வாழ்பவர்கள், அவர்கள் விரும்பும் வாழ்க்கையைப் பற்றி கனவு கண்டு கொண்டு இருப்பார்கள்.
இவர்கள் காட்சிபடுத்தும் கனவை கவரும் அளவிற்கு இவர்களின் மனம் சக்தி வாய்ந்ததாக இருக்கும். இவர்கள் மன அழுத்தத்தைத் தவிர்த்து மிகவும் ரிலாக்சாக இருக்க வேண்டும். 2 ம் எண் நபர்கள் போல், தனது துணையுடன் உணர்வு ரீதியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள்.
இவர்களின் துணையால் மோசமான முறையில் காயப்படும் வரை இவர்கள் இந்த பந்தத்தில் மிகுந்த விசுவாசமாகவும் நம்பிக்கையுடனும் இருப்பார்கள். 2ம் எண் நபர்கள் போல் இவர்களும் தொழில்முறை வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க, இவர்களின் சொந்த வாழ்க்கை அமைதியாக இருக்க வேண்டும். எதையும் அதிதீவிரமாக யோசிக்கும் காரணத்தால், எந்த ஒரு சின்ன பிரச்சனையும் இவர்களுக்கு பெரிதாக தோன்றும். தவறான புரிதலைத் தடுக்க இவர்கள் தங்கள் துணையுடன் அடிக்கடி மனம் விட்டு பேச வேண்டும்.
எண் 8 க்கான காதல் மற்றும் திருமணம் பற்றிய கணிப்பு
8ம் எண்கள் நபர்கள் உணர்ச்சி மிக்கவர்கள் என்றாலும் வலிமையானவர்கள். எல்லா எண் மனிதர்களையும் விட இவர்கள் மிகவும் விசுவாசமானவர்கள். ஆனால் இவர்களைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் எல்லோராலும் பெரிதும் துன்பப்படுவார்கள். 8ம் எண் பெண்கள் பொதுவாக தன்கள் திருமண வாழ்வில் கஷ்டப்படுவார்கள்.
ஆகவே இந்த எண் பெண்கள் தங்கள் ஜாதகத்திற்கு பொருத்தமான வரனைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்வது நல்லது. காதலில் இருக்கும்போது மிகவும் விசுவாசத்தோடு இருப்பார்கள். காதல் மற்றும் உறவு என்று வரும்போது பெரும்பாலும் இவர்கள் நடைமுறையைப் பின்பற்றுவதில்லை. தங்கள் இதயம் சொல்வதை மட்டுமே கேட்டு நடக்கின்றனர்.
இவர்கள் யாரோடும் விரைவாக இணைவதில்லை, ஆனால் ஒருமுறை இணைந்துவிட்டால், தனது துணையை கண்மூடித்தனமாக நம்பத் தொடங்கிவிடுவார்கள். 8ம் எண் நபர்கள் பொதுவாக 8ம் எண் அல்லது 4ம் எண் நபரோடு அதிக பொருத்தமாக இருப்பதைப் போல் உணர்வார்கள். ஆனால் இந்த இரண்டு எண்ணைக் கொண்ட நபர்களும் அதிகம் போராடுவார்கள் என்பதால் இவர்கள் திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது.
திருமண வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும் அதனை பொறுத்துக் கொண்டு போகும் தன்மைக் கொண்டவர்கள் 8ம் எண்கள் நபர்கள். ஆனால் ஆழமாக காயப்படுவதால் அந்த உறவில் இருந்து விலகும் முடிவையும் அவர்கள் எடுக்கலாம். அதனைத் தடுத்து நிறுத்த யாராலும் முடியாது. திருமண பந்தத்திற்கு சரியான ஒரு நபர் 8ம் எண் நபர்.
எண் 9 க்கான காதல் மற்றும் திருமணம் பற்றிய கணிப்பு எண் 9 செவ்வாய்க்குரிய எண்ணாகும்.
இது ஒரு தீமை செய்யும் கிரகம் ஆகும். மிகுந்த ஆக்கிரமிப்பு நிறைந்தவர்கள் மற்றும் ஆற்றல் நிறைந்தவர்கள் இந்த எண்ணுக்குரியவர்கள். இவர்கள் ஒரு புறம் உணர்ச்சி மிக்கவர்கள் தான் என்றாலும் உலகம் எப்போதாவது தான் இந்த முகத்தைக் காணமுடியும். எண் 9 ன் பாலியல் தேவை வேறு எந்த எண்ணை விடவும் அதிகமாக உள்ளது, மேலும் அவை பாலியல் பொருந்தக்கூடிய தன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.
உடல் இன்பத்திற்காக மட்டுமே இந்த எண் ஆண்கள் திருமண உறவைத் தாண்டி வெளியில் தொடர்பு கொள்வார்கள். இதில் உணர்வு ரீதியான ஈடுபாடு எதுவும் இருக்காது. அதே சமயம் தனது துணையுடன் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிப்பார்கள். ஆனால் குடும்பத்திற்கு வெளிய பாலியல் தொடர்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் அதனை மறுக்கவும் மாட்டார்கள்.