சென்னையில் வெளிநாட்டிற்கு செல்ல மறுத்த முபாரக் அலி என்பவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
முபாரக் அலி என்பவர் டைலர் தொழில் செய்து வந்தார். கடந்த 10-ம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது கார் ஒன்று மோதியதில் உயிரிழந்தார்.
இவரது மரணம் தொடர்பான விசாரணையில், முபாரக் அலிக்கு மைத்துனர்கள் விசா ஏற்பாடு செய்த நிலையில், அவர் மறுத்துள்ளார்.
ஆனால், முபாரக் அலியை மனைவியின் சகோதரர்கள் கட்டாயப்படுத்தியதில் வாக்குவாதம் முற்றி கல்லால் அடித்துள்ளனர்.
தொடர்ந்து கோபத்துடன் மோட்டார் சைக்கிளில் வெளியேறிய முபாரக் அலியை பின்தொடர்ந்த மைத்துனர்கள், தங்களது காரால் மோதி கொலை செய்துள்ளனர்.
இதில், சதக்கதுல்லாவை கைது செய்த பொலிசார், மற்றொரு மைத்துனர் அப்துல் ரகுமானை தேடி வருகின்றனர்.