சென்னை வியாசர்பாடி காலனியில் வசித்து வரும் முனுசாமியின் காமேஸ்வரி. 19 வயது நிறைந்த இவர் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
காமேஸ்வரி, தன்னுடன் பள்ளியில் ஒன்றாக படித்த சுந்தர் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.இவர்கள் காதல் தொடர்ந்த நிலையில் இதையறிந்த அவரது பெற்றோர், காமேஸ்வரியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை கண்டித்துள்ளனர்.
ஆனாலும் ஆடை பொருட்படுத்தாத காமேஸ்வரி நேற்று சுந்தரை சந்த்தித்து பேசியுள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் சென்னை கடற்கரைக்கு செல்வதற்காக வியாசர்பாடி ரெயில் நிலையத்தில் காத்து நின்றனர்.
அப்போது இருவருக்குமிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த காமேஸ்வரி,அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி வந்த மின்சார ரெயில் முன் திடீரென பாய்ந்தார். இதை கண்ட ரெயில் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் அவரது காதலன் சுந்தர் கதறி அழுதுள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து துண்டாக சிதைந்து கிடந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார், அவரது காதலன் சுந்தரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.